Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013

நாங்களும் ஆஜராகமாட்டோம்: அரசாங்கம்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் ரீட் மனு நாளை 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த அரசாங்க உறுப்பினர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டார்கள். என அரசாங்கம் இன்று புதன் கிழமை அறிவித்துள்ளது.

அமைச்சர் டிலான் பெரேராவே அரசாங்க உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு செல்லமாட்டார்கள் என தெரிவித்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகரை நீதின்மன்றத்தில் நாளை 3 ஆம் திகதி ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி அறிவிப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Views: 1260

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.