முன்பள்ளி நிர்மாணத்திற்கு அடிக்கல் நடல்
04-09-2013 06:31 PM
Comments - 0       Views - 804

கிளிநொச்சி, கன்டாவளை பிரதேச செயலக பிரிவில் இரண்டு முன்பள்ளிகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதிஸ்வரன் மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.முகுந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

யூஎன் - ஹபிட்டாட் உதவி திட்டத்தின் ஊடாக ஜப்பான் அரசாங்கம் வழங்கிய நான்கு மில்லியன் அமெரிக்க டொலர் உதவியின் ஒரு பகுதி இந்த முன் பள்ளிகளை நிர்மாணிக்க பயன்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை சமுதாய அமைப்புக்களின் பங்குபற்றலுடன் யூன் ஹபிடார் நிறுவனம் செயற்படுத்தும்.

இதேவேளை, வட மாகாணத்தில் மர நடுகை பிரசார நிகழ்வினையும் யூன் - ஹபிட்டாட் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. நாளைக்காக மரங்கள் எனும் திட்டத்தின் கீழ் இந்த செயற்திட்டம் முன்னேடுக்கப்படுகின்றது.

இந்த திட்டத்தின் முதலாவது மரம் இன்று புதன்கிழமை புதிய கிளிநொச்சி மாவட்ட செயலக கட்டிடத்தில் மாவட்ட செயலாளர் ரூபவதி கேதிஸ்வரனினாலட் நடப்பட்டது. அடுத்த இரண்டு வருடங்களுக்குள் 200,000 மரங்களை இந்த செயற்திட்டத்தின் மூலம் நட யூன் - ஹபிட்டாட் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"முன்பள்ளி நிர்மாணத்திற்கு அடிக்கல் நடல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty